ஆப்கனில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த பிரிட்டன் தயார் - விமானப்படை தலைவர்
காபூல் விமான நிலையத்தில் முன்னதாக பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டதில், 169 ஆப்கானிஸ்தான் குடிமக்களும், 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் மரணம் அடைந்த சம்பவம் உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதனையடுத்து தற்போது அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஆப்கானிஸ்தானில் 2 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் வசித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரிட்டன் விமானப்படை தலைவர் மார்ஷல் மைக் விக்ஸ்டன் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் 2 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை மீது ராக்கெட் தாக்குதல் நடத்த பிரிட்டன் விமானப்படை திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க பென்டகன் இதற்கு ஒத்துழைத்தால் இந்த தாக்குதலை மேற்கொள்ள போரிஸ் ஜான்சன் அரசு தயாராக உள்ளது என்று மிக தைரியமாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் யாரும் ஆப்கானிஸ்தானில் தற்போது இல்லை. எனவே, இந்த இரு நாடுகளின் வீரர்கள் பயங்கர தாக்குதலுக்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
