‘தாலிபான்களை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்’- துப்பாக்கி முனையில் மரண பீதியோடு செய்தி வாசிக்கும் வீடியோ!

world-viral-news
By Nandhini Aug 31, 2021 05:19 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

20 ஆண்டு கால போரை முடித்துக் கொண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறி விட்டது. காபூலிலிருந்து அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறி விட்டாலும் திட்டமிட்டப்படி அனைவரையும் வெளியேற்ற முடியவில்லை என்று பெண்டகன் கூறியிருக்கிறது. ஆப்கான்ஸ்தானை தாலிபான் கைபற்றியதிலிருந்து, தினமும் பல விதமான அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர், தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம், அவர்கள் தீங்கற்றவர்கள் என மரண பீதியில் செய்தி வாசிக்க, அவர் பின்னால் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நிற்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.