அந்தரத்தில் உயிருக்கு போராடிய பூனை - காப்பாற்றிய 4 பேருக்கு ரூ.10 லட்சம் வழங்கி துபாய் துணை அதிபர் பாராட்டு
துபாய் டெய்ரா பகுதியில் அல் மராரில் அடுக்கு மாடி குடியிருப்பில் கேரளாவை சேர்ந்த சிலர் வசித்து வருகிறார்கள். இந்தக் குடியிருப்பில் வசித்து வரும் சில பேர் பூனைகளை வளர்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த 24ம் தேதி அன்று இந்த குடியிருப்பில் 2-வது மாடியிலிருந்து பால்கனி சுவற்றின் மீது ஒரு பூனை ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அந்த பூனைக்குட்டி வீட்டிற்குள் செல்ல முடியாமல் நிலைத் தடுமாறி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்த குடியிருப்பில் வசித்து வந்த கேரள மாநிலம் கோதமங்கலம் பகுதியை சேர்ந்த அப்துல் ரசீத், பாகிஸ்தானை சேர்ந்த 2 பேரை அழைத்துக்கொண்டு, தன்னிடம் இருந்த ஒரு துணியை கொடுத்து எல்லோரும் சேர்ந்து விரித்து பிடித்துக் கொண்டிருக்க, அந்தரத்தில் தொங்கிய பூனை அந்த துணியில் விழும்படி பிடித்துக் கொண்டார்கள். அந்த பூனையும் சரியாக அவர்கள் விரித்த துணியில் வந்து விழுந்தது.
இதனால் அந்த பூனை காயம் இல்லாமல் உயிர் பிழைத்தது. இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது. இந்த வீடியோவை துபாய் நாட்டின் துணை அதிபர் ஷேக் முகமது பின்ரஜீத் கவனத்திற்கு சென்றது. அவர் பூனையை மீட்டவர்களை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு இல்லாமல், 4 பேருக்கும் தலா ரூ. 10 லட்சம் சன்மானம் கொடுத்து அனுப்பி உள்ளார்.

இதோ அந்த வீடியோ -
Proud and happy to see such acts of kindness in our beautiful city.
— HH Sheikh Mohammed (@HHShkMohd) August 24, 2021
Whoever identifies these unsung heroes, please help us thank them. pic.twitter.com/SvSBmM7Oxe