ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் - கமலா ஹாரிஸ் தெளிவான விளக்கம்

world-viral-news
By Nandhini Aug 24, 2021 10:27 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதால் பல்வேறு நாடுகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் வந்தார்.

இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

சிங்கப்பூர் அடுத்து கமலா ஹாரிஸ் வியட்நாம் சென்று அங்கு வெளியுறவு துறை அதிகாரிகளை சந்தித்து கலந்து பேச உள்ளார். அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்தன.

தற்போது அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

இது குறித்து கமலா ஹாரிஸ் கூறியதாவது - அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகித்து வருகிறது. இதனால், எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும்.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியை அமெரிக்க ராணுவம் பாதுகாக்கும். இது அமெரிக்காவின் கடமை. ஆசிய நாடுகளை ஆப்கன் வெளியேற்றம் பாதிக்கா வண்ணம் அமெரிக்கா பாதுகாக்கும் என்று கூறினார்.   

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் - கமலா ஹாரிஸ் தெளிவான விளக்கம் | World Viral News