ஆப்கானிஸ்தானில் மோசமடையப்போகும் மனிதாபிமான நிலை: யுனிசெப் வேதனை

world-viral-news
By Nandhini Aug 24, 2021 09:46 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு, மனிதாபிமான நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு இருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகளுக்கான அமைப்பான யுனிசெப் கவலை தெரிவித்திருக்கிறது.

யுனிசெப் இயக்குநர் ஹென்ரிட்டா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே ஒரு கோடி குழந்தைகள் மனிதாபிமான உதவிகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு 10 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.

22 லட்சம் சிறுமிகள் உள்பட 42 லட்சம் சிறார்கள் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். ஆப்கன் குழந்தைகள் எதிர்கொள்ளும் கசப்பான உண்மை இது. தற்போதைய அரசியல் மாற்றங்களால் இது மேலும் மோசமடையும்.

ஆப்கானிஸ்தானில் நிலவும் வறட்சி, உடனடியாக வரவுள்ள குளிர்காலம், கோவிட் பெருந் தொற்று, மற்றும் ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் அங்கு மனிதாபிமான நிலை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது. இருந்தும் நாங்கள் அங்கு சென்றடைய முடியாத பகுதிகளுக்கும் சென்று உதவிகளை அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 

ஆப்கானிஸ்தானில் மோசமடையப்போகும் மனிதாபிமான நிலை: யுனிசெப் வேதனை | World Viral News

ஆப்கானிஸ்தானில் மோசமடையப்போகும் மனிதாபிமான நிலை: யுனிசெப் வேதனை | World Viral News