இந்தியா தான் மிகச் சிறந்த நட்பு நாடு : ஆப்கானிஸ்தான் பாப் ஸ்டார் புகழாரம்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து கொள்ளாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது.
சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பதுதான் தலிபான்களின் சட்டத்திட்டம். இச்சட்டத்தை எதிர்த்து ஆர்யானா சயீது பாப் ஸ்டாராக உருவெடுத்தார்.
அவரை எப்போதுமே தலிபான்கள் அச்சுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில், ஆப்கானை விட்டு வெளியேறிய ஆர்யானா சயீது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது -
ஆப்கானிஸ்தானின் இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் காரணம். தலிபான்களை வளர்த்துவிட்டதே பாகிஸ்தான். இனிமேலாவது ஆப்கானிஸ்தானின் அரசியல் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடாமல் இருந்தால் போதும். சர்வதேச சமூகம் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ தீர்வு காண வேண்டும்.
பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்து ஆப்கன் விவகாரத்தில் தலையிடாமல் இருக்க செய்ய வேண்டும். இந்தியா எப்போதுமே ஆப்கனுக்கு சிறந்த நண்பனாக இருந்திருக்கிறது. எங்கள் நாட்டின் மீதும் மக்களின் மீதும் அகதிகள் மீதும் அக்கறை செலுத்தி வருகிறது. நாங்கள் இந்தியாவுக்கு எப்போதுமே கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
