உலக சாதனை படைத்த ‘அமெரிக்காவில் மிக உயரமான மனிதர்’ மாரடைப்பால் திடீர் மரணம்
'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற இகோர் வோவ்கோவின்ஸ்கி மாரடைப்பு திடீரென உயிரிழந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த இகோர் வோவ்கோவின்ஸ்கி (38). இவருடைய உயரம் 7 அடி 8 அங்குல உயரம் (234.5 செமீ) கொண்டவர்.
இந்த அசாதாரணமான உயரத்திற்காக, தன்னுடைய 27-வது வயதில் 'அமெரிக்காவின் மிக உயரமான மனிதர்' என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இகோர் வோவ்கோவின்ஸ்கி, சில ஆண்டுகளாக இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இகோருக்கு கடந்த 20-ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அதே நாளில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக அவரது தாயார் ஸ்வெட்லானா சமூகவலைத்தளத்தில் தகவலை பதிவிட்டார்.
