‘தடுப்பூசிகளை நம்பி ஒரு பலனும் கிடையாது...’ : 'COVID-21' மிகவும் ஆபத்தை விளைவிக்கும் - நிபுணர் கடும் எச்சரிக்கை
உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டாவை விட "கோவிட் -22" என அழைக்கப்படும் ஒரு புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH Zurich இன் பேராசிரியர் - நோயெதிர்ப்பு நிபுணர் மருத்துவர் சாய் ரெட்டி (Sai Reddy), தற்போதுள்ள கொரோன வைரஸ் வகைகளை விட, இந்த 'Covid-22' கலவையானது தொற்றுநோயின் புதிய மற்றும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்.
"ஒரு புதிய மாறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதனால் இனி நாம் தடுப்பூசிகளை மட்டும் நம்பியிருக்க முடியாது" என்று நோயெதிர்ப்பு நிபுணர் சாய் ரெட்டி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'COVID-21' என்று அழைக்கப்படும் டெல்டா வகை வைரஸ், எல்லாவற்றிற்கும் மேலாக அதிகளவில் பரவி ஆபத்தை விளைவிக்கக் கூடியது.
தென்னாப்பிரிக்கா (பீட்டா) மற்றும் பிரேசில் (காமா) ஆகியவற்றிலிருந்து வந்த கொரோனா வைரஸ் அதிக தொற்றுநோயாக மாறினால், அல்லது டெல்டா பிறழ்வுகளை உருவாக்கினால், நாம் தொற்றுநோயின் ஒரு புதிய கட்டத்தைப் பற்றி பேச வேண்டியிருக்கும்.
இது வரும் ஆண்டின் பெரிய பிரச்சனையாக உருவாகும். கோவிட்-22 நாம் இப்போது அனுபவிப்பதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த புதிய கொரோனா வைரஸ் வகையை அதிக அளவு ஆன்டிபாடிகளுடன் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதுதான் தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செய்கிறது என்றார்.
