‘எல்லாமே முடிஞ்சுபோச்சு...’ - இந்தியா திரும்பிய ஆப்கன் எம்.பி. கண்ணீர் பேட்டி!
காபூலிலிருந்து இந்தியா திரும்பிய ஆப்கானிஸ்தான் சீக்கிய எம்.பி ‘எல்லாம் முடிந்து விட்டது’ என்று தேம்பிய குரலில் கண் கலங்கி வேதனையோடு பேட்டி கொடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் மக்கள் பயந்து அங்கிருந்து வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் நரேந்தர் சிங் கல்சா, காபூலிலிருந்து இந்திய விமானப் படையால் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இந்தியா வந்த பின்பு நரேந்திர சிங் கல்சா பேசுகையில், ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் கட்டி எழுப்பப்பட்ட அனைத்தும் தற்போது தரைமட்டமாகிவிட்டன.
ஆப்கானிஸ்தானிலிருந்து நாடு திரும்ப எனக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், இந்திய அரசு மற்றும் இந்திய விமானப்படைக்கும், தனது சமூக உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கண்கலங்கி தழுதழுத்த குரலில் கூறினார்.
தலிபான்களை ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தற்போது 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் காபூலிலிருந்து இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
