மெஸ்ஸி கண்ணீரை துடைத்த டிஷ்யூ பேப்பர்.. ரூ.7.5 கோடிக்கு ஏலம் போனது
மெஸ்ஸி துடைத்துப் போட்ட டிஷ்யூ பேப்பரை ஒருவர் 7.5 ரூபாய் கோடிக்கு ஏலம் விட்டிருக்கிறார். 2004ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடினார். அண்மையில் அவர் அந்த அணியிலியிருந்து வெளியேறினார்.
இதனையடுத்து, விருந்து விழாவில், மனமுடைந்து பேசிய மெஸ்ஸி, தேக்கி வைத்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல், கையில் டிஷ்யூ பேப்பரை எடுத்து கண்ணீரைத் துடைத்தார்.
ஆனால், மெஸ்ஸி துடைத்துப் போட்ட டிஷ்யூ பேப்பரை யாரோ ஒருவர் எடுத்துச் சென்று அதில் மெஸ்ஸியின் டிஎன்ஏ இருப்பதாகவும், அதைக் கொண்டு அவரைப் போன்ற திறமை வாய்ந்த இன்னொரு கால்பந்து வீரரை குளோனிங் மூலம் உருவாக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
அதனால், சுமார் 7.5 கோடி ரூபாய்க்கு அந்த டிஷ்யூ பேப்பரை அந்த நபர் இணையத்தில் ஏலம் விட்டிருக்கிறார்.
