‘என்னது... இந்தியர்களை கடத்தி சித்ரவதை செய்தோமா?’ - தலிபான் மறுப்பு

world-viral-news
By Nandhini Aug 21, 2021 12:00 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, இதற்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால், ஆப்கான் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்குமோ என்று உலக நாடுகள் உற்று நோக்கி வருகிறது. ஆப்கானில் உள்ள மற்ற நாட்டு அவர்களை மீட்கும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இந்திய மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் இன்று 85 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்கள் பத்திரமாக விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையம் அருகே 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.

கடத்தப்பட்ட இந்தியர்களை தாக்கி சித்திரவதை செய்வதாகவும் ஆப்கான் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு தலிபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் யாரையும் நாங்கள் கடத்தவில்லை என்று தலிபன் செய்தி தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.      

‘என்னது... இந்தியர்களை கடத்தி சித்ரவதை செய்தோமா?’ - தலிபான் மறுப்பு | World Viral News