திடீரென பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 2 குழந்தைகள் உள்பட 5 பேர்
world-viral-news
By Nandhini
பரிதாப பலி! பாகிஸ்தானில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் குவாடர் எக்ஸ்பிரஸ்வே பகுதியில் திடீர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தற்கொலை வெடிகுண்டு தீவிரவாதி ஒருவன் சீனர்கள் பயணம் செய்த வாகனம் மீது திடீர் தாக்குதல் நடத்தி இருக்கிறான். இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று சீனர் ஒருவர் உள்பட 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்பு படையினர், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர்.
