குழந்தைக்கு ஏற்பட்ட அரிய வகை நோய் - சிறிது சிறிதாக ஏற்பட்ட மாற்றம் - பெற்றோர் கண்ணீர்
அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியில் 4 மாத குழந்தைக்கு உடல் முழுவதும் முடி வளர்ந்துள்ளது.
அமெரிக்காவில், ஒரு மாத குழந்தையான மேடியோ பெர்னாண்டஸுக்கு பிறவி சைபர் இன்சுலினசம் அரிய வகை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அரிய நோயினால், குழந்தையின் கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தியாகிறது. இதனால், ஆபத்தான ரத்த சர்க்கரை குறைவு குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது.
டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு உயிர் காக்கும் சிகிச்சை மேடியோவுக்கு அளிக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அக்குழந்தையின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
ஆனால், பெற்றோர்கள் மருந்தினால் பக்கவிளைவு ஏற்பட்டதை கவனித்தனர். உயிர் காக்கும் மருந்துகள் உட்கொண்ட சில வாரங்களுக்குப் பின்னர் குழந்தையின் உடல் மாறத் தொடங்கி விட்டது. முடி வளர்தல் முதலில் குழந்தையின் தலை மற்றும் நெற்றியில் தொடங்கியது.
பிறகு குழந்தையின் கால்கள், கைகள், முதுகு, வயிறு, தொடை என்று எல்லா இடங்களிலும் முடி வளர்ச்சி அதிகரித்து வளர்ந்துள்ளது.
இது குறித்து குழந்தையின் நிலையைக் கண்டு பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது - குழந்தை பிறந்த போது தலை வழுக்கையாக இருந்தது.
ஆனால் சில வாரங்கள் மருந்து உட்கொண்ட பின்னர், எங்கள் குழந்தை தலையில் முடி அதிகளவு வளர்ந்துவிட்டது. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. குழந்தைக்கு மொட்டை அடிக்க முடியுமா என்று மருத்துவர்களிடம் கேட்டோம்.
அப்படி மொட்டை அடித்ததால், குழந்தைக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்றனர். இந்த நோய் அரிதாக இருப்பதால் மருத்துவர்கள் குழந்தைக்கு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.
