ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது இலங்கை சிறுமி!

world-viral-news
By Nandhini Aug 20, 2021 06:30 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆசிய சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுமி ஒருவர் இடம்பிடித்து பெருமை சேர்த்திருக்கிறார்.

இலங்கையைச் சேர்ந்த எம்.எல்.எம்.ஜெஸீம் மற்றும் யு.கே.பாத்திமா ஜவ்ஹறா ஆகிய தம்பதிகளின் மகளாகிய எம்.ஜே.பாத்திமா அனத் ஜிதாஹ், அனைத்து ஆசிய நாடுகளின் கொடிகளையும் மிக வேகமாக அடையாளம் கண்ட முதல் ஆசிய சிறுமி “Fastest to Identify Flags of all Asian Countries” எனும் “கிறேன் மாஸ்டர்” மகுடத்தை பெற்றுள்ளார்.

கடந்த 03.12.2016ம் ஆண்டு பிறந்த இவர், தனது 4வது வயதில் ஆசிய நாடுகளின் கொடிகளை 24 வினாடிகளில் வேகமாக அடையாளம் கண்டுபிடித்தால் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

அத்துடன் சிறு வயதிலேயே சிறந்த ஞாபக சக்தியும் பல திறமைகளையும் கொண்டிருந்த இச்சிறுமி, ஆங்கிலத்தை சரளமாக வாசிக்க, எழுத, பேச கற்றுக்கொண்டுள்ளார். ஆசிய சாதனை புத்தகத்தில் இலங்கை சிறுமிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. 

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது இலங்கை சிறுமி! | World Viral News