"பாலுறவு எனக்கு பலத்தை கொடுத்தது"- ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற ரஷ்ய நீச்சல் வீராங்கனை
பாலுறவு கொள்வதால் விளையாட்டு வீரர்களுக்கு அதிக சக்தி கிடைப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது என்று ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் நீச்சல் பிரிவில் மூன்று தங்கம் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கணை அல்லா சிஷ்கினா கருத்து தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அல்லா சிஷ்கினா கூறியதாவது -
நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்புகிறேன். நான் என்னுடைய மருத்துவரான டெனிசிடம் கலந்து பேசினோம். அதன்படி அறிவியல் சமூகம் என்ன சொல்கிறது என்றால், உங்களுக்கு அதிக சக்தி வேண்டும் என்றால், நீங்கள் பாலுறவில் ஈடுபட வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு நீண்ட நேர வேலை இருந்தால் தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தால், அப்போது பாலுறவு தேவைப்படாது. இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். பாலுறவு கொள்வது என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். பாலுறவுக் கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்றால் அதில் நீங்கள் ஈடுபடலாம்.
முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு பாலுறவு நல்ல பலனை கொடுக்கிறது. பாலுறவு மூலம் டெஸ்டோஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. அதனால் விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோஷம் கட்டுப்படுத்தப்படும். தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத பாலுறவில் ஈடுபடலாம். அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு உங்களுக்கு கிடைக்கும் என்றார்.
32 வயதான ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இதற்கு முன்பு ரியோவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கிலும், 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் நீச்சல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.