தாலிபான்களால் எனக்கு நடந்த கொடூரம்... அதை நினைத்தால்.... - நோபல் பரிசு வென்ற மலாலா!
பெண் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்று கொடுத்து வந்த மலாலா (24) கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தானில் வைத்து தாலிபான் சுட்டனர். தாலிபான்கள் அவரைக் கொல்ல முயற்சி செய்த போது அவர் முகத்தில் காயத்துடன் உயிர் தப்பினார். இன்றும் அவர் முகத்தில் அந்த தழும்புகள் அடையாளமாக உள்ளன.
மலாலாவை தாலிபான்கள் சுட்டதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று போராடி வரும் மலாலாவிற்கு கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாலிபான்களின் கொடூர முகத்தை நேரடியாக பார்த்தவர் மலாலா. இப்போது, ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
2007ம் ஆண்டு மலாலா வாழ்ந்த பாகிஸ்தானுக்குள் நுழைந்த தாலிபான்கள், பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு தடை விதித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
இது குறித்து அவர் நினைவு கூர்ந்து பேசியதாவது -
அன்று நான், இனி அவர்கள் என்னை வகுப்பறையைக் காணவோ, புத்தகங்களைத் தொடவோ விடமாட்டார்கள் என்ற எண்ணத்தால் எப்படி ஒரு நம்பிக்கையற்ற நிலைமையில் இருந்தேனோ, அதே நிலைக்கு இன்று மீண்டும் ஆப்கன் சிறுமிகளும், இளம்பெண்களும் ஏற்பட்டுள்ளது.
15 வயதில் தாலிபான்களின் தடையை மீறி பேருந்தில் பள்ளிக்குச் செல்லும்போது தாலிபான்களால் நான் சுடப்பட்டேன்.
ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி ஒன்றில் நான் பேட்டி அளித்தது, வெளியானதைத் தொடர்ந்து என்னை அடையாளம் கண்டுபிடித்து தாலிபான்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி செய்தனர். ‘
தாலிபான்களின் ஆக்ரோஷத்தை நேரில் பார்த்த அத்தருணம் என்னால் என்றும் மறக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.