‘நான் பெட்டி பெட்டியாக பணத்தை அள்ளிக்கொண்டு வரவில்லை.... போட்ட சட்டை, கால் செருப்போடு ஓடி வந்தேன்’ - அஷ்ரப் கனி
ஆப்கானிஸ்தானிலிருந்து ஓடிச் சென்ற அதிபர் அஷ்ரப் கனி முதல்முறையாக வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
தலிபான்கள் தலைநகர் காபூலை நெருங்கிய போது, ஒமானுக்கு அஷ்ரப் கனி தப்பி ஓடிச் சென்றார். அப்போதுதான் ஐக்கிய அரபு அமீரகம் அஷ்ரப் கனி அபுதாபியில் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது
. இதனையடுத்து, நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் அஷ்ரப் கனி அதிகாரபூர்வ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏன் நாட்டை விட்டு தப்பி வந்ததைப் பற்றி அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார். அதில் கூறியதாவது -
ஒரு வேளை தான் தலைநகரை விட்டு வெளியேறியாமல் இருந்திருந்தால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும். அதைத் தவிர்ப்பதற்காக நான் இந்த முடிவை எடுத்தேன்.
தனது நாட்டுக்கான தஜிகிஸ்தான் தூதுவர் குறிப்பிட்டிருப்பது போல தான் ஒன்றும் கோடிக்கணக்கான பணத்தை ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு செல்லவில்லை.
தான் அமீரகத்தில்தான் இருக்கிறேன். தான் பாதுகாப்பாக வெளியேற உதவிய ஆஃப்கன் பாதுகாவலர்களுக்கு மிக்க நன்றி. அமைதிக்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதுதான் தலிபான் ஆக்கிரமிப்புக்கு முக்கிய காரணம்.
தான் ஒன்றும் 169 மில்லியன் டாலர் மக்கள் பணத்தை எடுத்துச் செல்லவில்லை. வேறு வழியின்றி ஆஃப்கனை விட்டு வெளியேறியபோது, தன்னிட உடுத்திய உடையும் கால் செருப்பும் மட்டுமே இருந்தது. தனக்கு பணமாற்றம் செய்யப்பட்டதாக வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை.
இவ்வாறு அவர் கூறினார்.
மனிதாபிமான அடிப்படையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்றுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டின் சொத்துக்களை அஷ்ரப் கனி திருடிச்சென்றிருப்பதாகவும், அவரை ஒப்படைக்கவேண்டுமெனவும் தலிபான்கள் பிற நாட்டு தூதரகங்களிடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
