ஆப்கானிஸ்தானிலிருந்து கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமான சக்கர பகுதியில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

world-viral-news
By Nandhini Aug 19, 2021 06:34 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால், ஆட்சியை அந்நாட்டிலிருந்து மக்கள் பலரும் வெளியேறி வருகிறார்கள்.

கடந்த திங்கட்கிழமை அன்று காபூலிலிருந்து அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோபல்மாஸ்டர் விமானம் ஒன்று கத்தார் சென்றது.

அப்போது, விமானத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் பயணம் செய்தார்கள். மொத்தம் 640 பேர்கள் நிரம்பிய அமெரிக்க விமானப்படை விமானத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க விமானம் புறப்பட்ட சமயத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் விமானத்தை சுற்றிவளைத்து அதில் ஏற முயற்சி செய்தார்கள்.

மேலும், பலர் விமானத்தின் சக்கர பகுதியில் அமர்ந்து மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொண்டார்கள். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சக்கர பகுதியில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் விமானத்திலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.