ரத்தக்களறியை தடுக்கவே வெளியேறினேன்... நான் மீண்டும் நாடு திரும்புவேன் – ஆப்கன் அதிபர் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த போரில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். முன்னதாக அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனிக்கு தஞ்சம் அளித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இதனால் அந்நாட்டில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. மற்ற நாட்டவர்களை அந்தந்த நாட்டின் அரசாங்கம் பத்திரமாக மீட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து உலக நாடுகள் உற்று நோக்கி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி சமூக வலைதளம் வாயிலாக மக்களிடம் பேசினார். அப்போது, அவர் ரத்தக்களறியை தடுப்பதற்காகவும், காபூலில் பேரழிவு நிகழக் கூடாது என்பதற்காகவும் நான் நாட்டை விட்டு வெளியேறினேன்.
மீண்டும் ஆப்கன் திரும்பி நாட்டின் இறையாண்மைக்காக போராடுவேன் என்று விளக்கம் கொடுத்தார்.
பேஸ்புக் நிறுவனம் தலிபான்களின் தலிபான்களின் ஃபேஸ்புக் , வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கியுள்ளது. தலிபான்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.