ஆப்கானிஸ்தானின் நிலை: உலக மக்களை கண்கலங்க வைத்த புகைப்படம்

world-viral-news
By Nandhini Aug 18, 2021 09:10 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று தனியாக பரிதவித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ காண்போர் கண்களை கலங்கச் செய்துள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ளனர்.

இதனால், அவ்வப்போது ஆப்கானிஸ்தான் குறித்த செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக முக்கிய நகரான காபூலில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், நூற்றுக்கணக்கானோர் விமானம் நிலையம் முன்பு குவிந்து வருகின்றனர்.

விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் குழந்தை ஒன்று தனியாக பரிதவித்துக் கொண்டிருந்தது.

நீண்ட நேரம் ஆகியும் அந்த குழந்தை கூடையில் அழுதுக்கொண்டிருந்தது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், விமானநிலையத்தில் கிடந்த பெற்றோர் காபுப் பிடி-5 என்ற பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும், அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தற்போது, 7 மாத குழந்தை தனியாக பரிதவித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.