பிரிட்டிஷ் கொலம்பியாவில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ : அவசர அரசமாக மக்கள் வெளியேற்றம்!
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்கனவே பல இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, தற்போது பலத்த காற்று வீசி வருவதால் நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் தங்கள் வீடுகளை விட்டு அவசர, அவசரமாக வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், Okanagan பகுதி முழுவதும் காட்டுத் தீ அதிகரித்துள்ளதால் தொடர்ந்து பல நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளது.
புகை மற்றும் பலத்த காற்று காரணமாக, ஹெலிகொப்டர்கள் மூலம் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் பல இடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. அதன் காரணமாகவே நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
