ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை மீட்பதில் சவால் நீடிக்கிறது - மத்திய அரசு தகவல்!
ஆப்கானிஸ்தானில் 20 வருடமாக நடைபெற்று வந்த போர் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அதிபரை வெளியேறிய பிறகு தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர். அந்நாட்டில் இருக்கவே மக்கள் பெரிதும் அஞ்சுகின்றனர்.
இதனால், மக்கள் அவசரமாக வேறு நாடுகளுக்கு செல்ல விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக காபூல் விமான நிலையத்தில் ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். அங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை பதற்றமடைய செய்து தாலிபான்கள் படை. காபூல் விமான நிலையத்திலிருந்து செல்ல விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. நேற்று ஏர் இந்தியா விமானத்தில் 129 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பினர்.
இன்று காலை மீண்டும் 120 பேர் வந்து இறங்கியுள்ளனர். இந்த நிலையில் காபூலில் இந்தியர்கள் காத்திருப்பது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காபூல் விமான நிலைய செயல்பாடுகள் பெரும் சவாலாக உள்ளது. தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் இணைந்து ஆப்கனின் நிலவரத்தை விவாதித்தோம் என்றார்.
