ஆப்கான் பெண்களுக்கு, தலிபான்களுடன் கட்டாய திருமணம்? மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கை!

world-viral-news
By Nandhini Aug 17, 2021 09:54 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், பெண்களை கட்டாய திருமணம் செய்து அடிமையாக்கும் முயற்சி துவங்கி இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்து விடுத்துள்ளனர்.

மத கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் இந்த அமைப்பினர், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். இந்த அமைப்பினர் திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்த துவங்கி உள்ளது.

இதுகுறித்து, மனித உரிமை ஆர்வலர்கள் கூறியிருப்பதாவது - கடந்த 1996-2001ல் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தபோது பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டன.

ஆண் துணை இல்லாமல் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஜூலையில் பதாக் ஷான், தக்கார் மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

அப்போது, உள்ளூர் மதத் தலைவர்களிடம் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்ட விதவையர் குறித்த பட்டியல் கேட்டிருக்கிறார்கள்.

தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்காக இந்தப் பட்டியலை தலிபான் கேட்டுள்ளனர். இதன் வாயிலாக கட்டாய திருமணம் செய்து, மனைவி என்ற பெயரில் பெண்களை அடிமையாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுபோன்ற கட்டாய திருமணத்தை தவிர்ப்பதற்காக பலர் புலம் பெயர்ந்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும் ஒன்பது லட்சம் பேர் உள்நாட்டிலேயே வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.