ஆப்கன் அதிபர் மாளிகையில் தலிபான் நடனம்- வீடியோ வைரல்

world-viral-news
By Nandhini Aug 17, 2021 05:14 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றிய உற்சாகத்தில், அந்நாட்டு அதிபர் மாளிகையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றி விட்டார்கள்.

இதனால், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மேலும், அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், ஆப்கானிஸ்தான் என்ற பெயரை இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான் என மாற்றி இருக்கிறார்கள். அதேவேளையில், இடைக்கால ஆப்கன் அதிபராக தலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியதை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.