ஆப்கானின் நிலை குறித்து ஒரே ஒரு வார்த்தையில் உருக வைத்த ஆப்கானிஸ்தான் வீரர்
தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் ராஜ்ஜியமாக இருக்கிறது. இனி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சுதந்திரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும். பெண்கள் படிக்க கூடாது, வேலைக்குச் செல்ல கூடாது, முழுவதுமாக உடலை மறைக்க வேண்டும் என கொடுங்கோலான சட்டங்களைப் போட்டு துன்புறுத்தும் கொடூரர்கள் தான் தலிபான்கள்.
தலிபான்களால் ஆப்கானிஸ்தான் என்னவாகப் போகிறதோ என உலக நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலையில் உள்ளன. இந்நிலையில், தனது நாட்டின் நிலை குறித்து உடைந்து பேசியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் ரஷித் கான்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். நவீன கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான ரஷித் கானின் பதிவு ஒவ்வொருவரின் மனதையும் உலுக்கியிருக்கிறது. அவர் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது அமைதி. Peace என பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவு சமூவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Peace ????????????
— Rashid Khan (@rashidkhan_19) August 15, 2021