ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காதான் காரணம்: அமெரிக்க வாழ் ஆப்கன் மக்கள் போராட்டம்!
world-viral-news
By Nandhini
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதற்கு அமெரிக்காதான் காரணம் என்று ஆப்கன் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு அசாதரண சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில் இந்த சூழலை தலிபான்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஆப்கானில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு அமெரிக்கா தான் காரணம் என்று அமெரிக்கா வாழ் ஆப்கானிஸ்தான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
