68 வயது முதியவரை காதலிக்கும் 24 வயது இளம்பெண் : அதிர்ச்சி காரணம்!
அமெரிக்காவில் 68 வயது முதியவரை காதலிக்கும் 24 வயது பெண் தங்கள் இருவருக்கும் இடையே காதல் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கோனி கோட்டன் என்ற 24 வயது கொண்ட இளம் பெண், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஒரு தன்னார்வ தொண்டில் ஈடுபட்டிருந்த போது, 68 வயது மதிக்கத்தக்க ஹெர்ப் டிக்கர்சன் என்பவரை சந்தித்திருக்கிறார்.
முதலில் இருவரும் நல்ல நட்புடன் பழகி வந்துள்ளனர். வெளியில் எங்கு சென்றாலும், இருவரும் ஒன்றாகவே சென்று வந்துள்ளனர். நாளடைவில் இவர்களுடைய நட்பு காதலாக மாறியது. கடந்த ஆண்டு தங்களது காதலை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டனர். நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர்.
இவர்கள் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலானது. பலர் கோனி கோட்டன் முதியவரை பணத்திற்காக மட்டுமே காதல் செய்கிறார் என்று கமெண்ட் வந்து வந்தனர்.
இதற்கு கோனி கோட்டன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், நாங்கள் இருவரும் ஒன்றாகவே காதலிக்கிறோம். நான் அவரை காதலித்த பின்பு, எனக்கு கிடைக்கும் பொதுவான கருத்து என்னவென்றால், நான் அவருடைய பணத்திற்காக இருக்கிறேன் என்று.
அதுமட்டுமின்றி அவர் என்னுடைய உடலுக்காக இருப்பதாக பலர் கூறுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை.
நான் முதன் முதலில் என் குடும்பத்தில் சொன்னபோது, ஆரம்பத்தில் என் குடும்பத்தில் இருந்தவர்கள் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு, அவர்களும் காலப்போக்கில் எங்களை ஏற்றுக் கொண்டனர்.
ஏனெனில், அவர் என்னை எவ்வளவு நேசிக்கிறார், சந்தோஷப்படுத்துகிறார் என்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர் என்றார்.
பின்னர், இது குறித்து 68 வயதான முதியவர் ஹெர்ப் டிக்கர்சன் கூறுகையில், முதலில் எனக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. அவர் என்னுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்பது அசாதாரணமானது. அவள் பணத்திற்காக தன்னுடன் ஊர் சுற்றுவதாக கூறுகிறார்கள்.
இந்த கொரோனா காலக்கட்டம் இருவரையும் சரியாக புரிந்து கொள்ள உதவியது. எங்கள் குடும்பத்தினரும் புரிந்து கொண்டனர்.
நாங்கள் இரண்டு பேரும் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள், எனவே இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாகவும், அவர்களுக்கும் இருந்தது. இருப்பினும், நான் அவருடன் ஒன்றாக நேரத்தை செலவிட விரும்புகிறேன் என்றார்.
