உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்

World Celebration Valentine'sDay Valentine'sDayHistory
By Thahir Feb 14, 2022 02:37 AM GMT
Report

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

காதலர் தினம் எப்படி வந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் இன்றைய தலைமுறைக்கு பிப்ரவரி மாதம் என்றாலே காதலர் தினம் தான் நிறைவுக்கு வரும்.

ஒவ்வொருவரும் தனது காதலிக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்பதை முன்கூட்டியே திட்டம்யிட்டு தான் காதலிக்கும் நபருக்கு பரிசுகளை வழங்கி அன்பை பரிமாறி வருகின்றனர்.

பிப்ரவரி 14-ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேயர்கள் இந்த நாளை காதலர் தினமாக கொண்டாடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ரோமானிய அரசனின் ஆட்சி காலத்தில் காதலர் தினம் கொண்டாட்டம் கொண்டாடப்படுவதாக வரலாறுகள் தெரிவிக்கின்றனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாட்டம் கோலாகலம் | World Valentine S Day Celebration And History

ரோமானிய அரசனாக கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்த போது ரோமாபுரி நாட்டில் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என அறிவித்ததாக கூறப்படுகிறது.

இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்கினர்.

அரசனின் எதிர்ப்பை மீறி ரோமானிய பாதிரியார் வாலன்டைன் என்பவர் ரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.

இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான். மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன், தனது மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். ஆனால், வாலண்டைன், அனைத்து காவலையும் மீறி, அந்த கண் தெரியாத இளம்பெண்ணுக்கு காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார்.

இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்தசூ பின் வாலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இது நடைபெற்றது பிப்ரவரி மாதம் 14ம் தேதி. ஆகவே அன்றைய தினத்தையே, காதலின் சின்னமாக வாலன்டைன்ஸ் டேவாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.