தனக்காக சொந்தமாக புதிய சமூக வலைதளத்தை தொடங்கினார் டிரம்ப்!

world-trump
By Nandhini Oct 21, 2021 06:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கி இருக்கிறார்.

தனது டிரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் “ட்ரூத் சோஷியல்” என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கி இருக்கிறார். இந்த சமூக வலைதளத்திற்கு “ட்ரூத் சோஷியல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

“ட்ரூத் சோஷியல்” ஆப் அமெரிக்கா முழுவதும் முதல்காலாண்டில் வெளியாக வாய்ப்பு என டிரம்ப் அறிவித்திருக்கிறார். மேலும், ஆப்பில் ஸ்டோரில் “ட்ரூத் சோஷியல்” ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுவந்ததால் டிரம்பின் கணக்குகளை டுவிட்டர், முகநூல் நிறுவனங்கள் முடக்கின. இந்நிலையில், சொந்தமாக சமூக வலைதளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று தொடங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனக்காக சொந்தமாக புதிய சமூக வலைதளத்தை தொடங்கினார் டிரம்ப்! | World Trump