பாகிஸ்தானில் இலங்கையரை உயிருடன் எரித்து கொன்று செல்பி எடுத்த நபர் - நெஞ்சை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்
பாகிஸ்தானில் இலங்கையர் எரித்து கொலை செய்யப்பட்ட போது, அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி எடுத்து வெளியிட்ட புகைப்படத்தால் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், சியால்கோட் நகரில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தனியார் தொழிற்சாலையில் மேலாளராக இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த பிரியந்த தியவதனா பணியாற்றி வந்தார். இவர் அங்கிருக்கும் தொழிற்சாலை ஊழியர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு, அதன் பின் எரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது இலங்கை மக்களிடையே மட்டுமின்றி, உலகில் இருக்கும் பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது ஒரு அவமானகரமான நாள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களங்களில் சியால்கோட் சம்பவம் தொடர்பான் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. அதில் பாகிஸ்தானியர் என்று நம்பப்படும் ஒருவர் இந்த சம்பவத்தின் போது செல்பி எடுத்திருக்கிறார்.
இதைக் கண்ட இணையவாசிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள், இஸ்லாமியர் மதம் நமக்கு இதை சொல்லிக் கொடுக்கவில்லை, இன்று நம் ஒரு நாடாக தோற்றுவிட்டோம், இஸ்லாமியர்களாக தோற்றுவிட்டோம், மனிதர்களாக தோற்றுவிட்டோம், பிரியந்த தியவதனா எங்களை மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

பல்கலைக்கழக கல்வியாளர்களை குறிவைக்கும் பிரசாரங்கள்! கண்டனம் தெரிவித்த யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் IBC Tamil
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan