கொரோனா அச்சுறுத்தல் - விடிய விடிய 4 மணி நேரம் கிளப்பில் நடனமாடிய பிரதமர் - வெடித்தது சர்ச்சை
பிரதமர் சன்னா மரின் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் இரவு விடுதியில் 4 மணி வரை நடனம் ஆடிய வீடியோ வைரலானதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
பின்லாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் சன்னா மரின். இவர் அமைச்சரவையில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால், பிரதமர் சன்னா மரின் இதையெல்லாம் கண்டுக்காமல், ஹெல்சின்கியில் உள்ள ஒரு இரவு விடுதி அதிகாலை 4 மணிவரை நடனம் ஆடி பொழுதை போக்கியுள்ளார்.
இது குறித்த விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவால் பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.
இந்த வீடியோவுக்கு விளக்கம் சன்னா மரின் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் குறித்து அவர் பேசுகையில், நான் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டேன். இதனால், நான் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
ஆனால், இவர் விளக்கம் கொடுத்தும் எதிர்ப்புகள் குறையவில்லை. அதனால், அவர் மக்களிடையே மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள கோரிய குறுஞ்செய்தி அலுவலக செல்போனுக்கு அனுப்பப்பட்டதாகவும் அதனை தான் வீட்டிலேயே வைத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாள் குறுஞ்செய்தியை பார்த்த பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும் தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.