மழை காரணமாக டெஸ்ட் போட்டி தடைபட்டால் கோப்பை யாருக்கு? - ரசிகர்கள் குழப்பம்

World test championship
By Petchi Avudaiappan Jun 18, 2021 12:51 PM GMT
Report

 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற இருக்கும் சவுதாம்ப்டனில் மழை பெய்து வருவதால் டாஸ் போடுவது தடைபட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டனில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியை காண உலகமெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அங்கு மழை பெய்து வருவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு கனவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் நடைபெறாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிக்கைகள் தெரிவிப்பதால், இந்த போட்டி ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஒருவேளை போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால், சாம்பியன் பட்டமும், பரிசு தொகையும் இரு அணிகளுமே பகிர்ந்தளிக்கப்படும்.