தன் வகுப்பில் படித்த மாணவரை திருமணம் செய்த டீச்சர் - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
அமெரிக்காவில் மிசௌரி என்ற மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 23 வயதான பெண் டீச்சர் பணியாற்றி வந்தார். இவர் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
இவர் தன் வகுப்பில் படிக்கும் 19 வயதான மாணவனை பார்த்ததும் காதலில் விழுந்துள்ளார். பின்னர் அவரை காதலித்து வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருமே நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.
இதன் பிறகு அந்த டீச்சர் அந்த மாணவனை தன் வீட்டிற்கு கூட்டிச் சென்று பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் அந்த மாணவரின் வீட்டிற்கு தெரியவந்தது. உடனே மாணவரின் பெற்றோர் டீச்சர் மீது போலீசில் புகார் கொடுத்தனர் . இந்த புகாரை வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த டீச்சரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர் 2 வருடம் ஜெயில் தண்டனையை அவர் அனுபவித்ததும், அவர் ஜாமீனில் விடுதலையானார். வெளியே வந்த டீச்சர் இந்த வழக்கில் தனக்கு மிகப்பெரிய தண்டனை கிடைக்கும் என்று பயந்து, அந்த மாணவரையே கல்யாணம் செய்து கொண்டு, குழந்தையும் பெற்று கொண்டார்.
இப்போது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருவதால், கோர்ட் அவருக்கு என்ன தண்டனை தருமென்று அனைவரும் ஆவலாக இருந்தார்கள். இப்போது போலீசார் வழக்கை வாபஸ் வாங்கியதும், இறுதியில் டீச்சர் மீதான கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
