உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சூரியனின் மேல் படலத்தை தொட்டது நாசா விண்கலம் - வியப்பூட்டும் புகைப்படங்கள்
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலமானது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் சூரியனின் வளிமண்டல மேலடுக்கை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத பல தகவல்கள் இதன் மூலம் கிடைத்திருப்பதாக நாசா அப்போது தெரிவித்தது.
குறிப்பாக சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் 6 ஆண்டுகளில் அதாவது 2024ம் ஆண்டு சென்று அடைந்து பூமியை தாக்கும் சூரிய புயல் எப்படி உருவாகிறது என்பதை கண்டறியும் என்றும் நாசா கூறியிருந்தது. அத்துடன் பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள சூரியனின் வளிமண்டல மேல் அடுக்கை இந்த விண்கலம் படிப்படியாக நெருங்கி 2024ம் ஆண்டு சென்றடையும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சூரியனின் மேல் படலத்தை தொட்டது சோலார் ப்ரோப் விண்கலம். 2018ம் ஆண்டு செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அங்கு உள்ள துகள்கள் மற்றும் காந்தப் புலங்களின் மாதிரிகளை சேகரித்து கொண்டதாக நாசா தகவல் தெரிவித்திருக்கிறது.
இதனால், சூரியனைப் பற்றி பல அறியாத முடியாத தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது நாசா.


