இத்தாலியில் பரபரப்பு - பொது இடத்தில் உடைகளை கழற்றி விமான பணிப்பெண்கள் போராட்டம்

1 month ago

இத்தாலியில் வேலை இழப்பு மற்றும் ஊதிய குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விமான பணிப்பெண்கள் பொது வெளியில் சீருடைகளை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலியின் புதிய தேசிய விமான நிறுவனமான ஐடிஏ ஏர்வேஸ் கடந்த வாரம் சேவையை தொடங்கியது.

ஆனால், தற்போது இத்தாலிய விமானப் போக்குவரத்தில் சில முக்கிய பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. முன்னாள் அலிடாலியா விமானப் பணியாளர்கள் வேலை இழப்பு மற்றும் ஊதியக் குறைப்புக்கு எதிர்ப்பு எதிர்த்து தங்கள் ஆடைகளைக் கழற்றி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

ரோம் நகரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க கேம்பிடோக்லியோவில் சுமார் 50க்கும் மேற்பட்ட முன்னாள் விமானப் பணிப்பெண்கள் தங்கள் அலிட்டாலியா சீருடையை கழற்றி கீழே போட்டுவிட்டு, உள்ளாடையுடன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்