இலங்கையில் பொழிந்து வரும் கனமழை : நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி - ஒருவர் மாயம்
இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நம் அண்டை நாடான இலங்கையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 5000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியும், வெள்ளத்தில் மூழ்கியும் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் மாயமாகி இருக்கிறார். பொதுவாக அக்டோம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்தைவிட மழை கூடுதலாக பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
