கைகளால் 20 மீ.தூரத்தை 4.78 வினாடிகளில் கடந்து கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்! குவியும் பாராட்டு
world-sports-guinness-world-record
By Nandhini
அமெரிக்காவில் இரு கால்களும் இல்லாத இளைஞர் ஒருவர் தனது கைகளால் அதிவேகமாக ஓடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.
ஓஹியோ நகரைச் சேர்ந்த சீயோன் கிளார்க் என்ற 23 வயது இளைஞர் பிறவியிலேயே இரு கால்களும் இல்லாமல் பிறந்தார். இருந்தாலும், மனம் தளராத அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார். மல்யுத்தம் மற்றும் சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் சீயோன் கிளார்க்.
இந்நிலையில், கைகளால் வேகமாக ஓடி ரெனால்ட்ஸ் என்பவரின் சாதனையை கிளார்க் முறியடித்திருக்கிறார். 20 மீட்டர் தூரத்தை வெறும் புள்ளி 78 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார் சீயோன் கிளார்க்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan
