விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்- வரலாற்று சாதனை படைக்கும் ரஷ்ய குழு
இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பட ஷூட்டிங்கிற்காக ரஷ்ய படக்குழு விண்வெளி செல்ல உள்ளது.
படத்தின் பெயர் 'The Challenge'. பெயருக்கு ஏற்ப ரஷ்யாவின் படப்பிடிப்பும் குழுவுக்கு இது சவாலான பணி தான்.
விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தும் உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாற்று சாதனை படைக்கிறது. விண்வெளி வீரரை காப்பாற்ற விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பெண் மருத்துவரின் கதைதான் இதன் படக் கதையாகும்.
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் செவ்வாய்க்கிழமை இந்திய நிலையான நேரப்படி மதியம் 2.25 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஒரு விண்வெளி வீரர், ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் ஒரு நடிகர் ஆகியோரை விண்கலத்தில் ஏற்றிச் செல்லும். நாசாவும் (NASA) இது குறித்த தகவல்களை அளித்திருக்கிறது.
நடிகை யூலியா பெரெசில்ட், தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ மற்றும் விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் ஆகியோர் அக்டோபர் 5ம் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்எஸ் -19 விண்கலத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) செல்கிறார்கள்.
படப்பிடிப்புக்காக குழுவுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. குழு 'The Challenge' திரைப்படத்தில் வெவ்வேறு காட்சிகளை படமாக்க 12 நாட்கள் விண்வெளியில் செலவிட உள்ளது. இன்று ரஷ்யா விண்வெளியில் முதல் படத்தை எடுக்கும் போட்டியில் அமெரிக்காவை முந்தியிருக்கிறது.
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தனது 'மிஷன் இம்பாசிபிள்' படத்தை விண்வெளியில் எடுத்து, முதல் விண்வெளி ஷூடிட்ங் என சாதனை படைக்க இருக்கிறார் என்று இதுவரை கூறப்படுகிறது. படத்தின் படப்பிடிப்புக்காக டாம் குரூஸும் விண்வெளிக்கு செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
