வீட்டின் கழிவறைக்கு சென்ற சிறுமி - பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

world-snake-death
By Nandhini Oct 03, 2021 09:44 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சவுதி அரேபியாவில் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சவுதி அரேபியாவில் உள்ள அபா என்னும் நகரில் வசித்து வந்த 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான், நேற்று வீட்டிலிருக்கும் கழிப்பறைக்கு சென்றாள். அப்போது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு சிறுமியை கடித்துள்ளது. இதனால், அலறி துடித்த தமரா உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக சிறுமியை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனில்லாமல் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இது குறித்து, சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், எங்கள் வீட்டினுள் பாம்பு வந்ததைப் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நாட்டின் பாலைவனத்திலும், லைப்பகுதிகளிலும் தான் அதிகமாக பாம்புகள் உள்ளன. நகரங்களில் பாம்புகள் குறைவாகத்தான் இருக்கும். கொரோனா விதிமுறை தளர்த்தப்பட்ட பின், தமரா தற்போது தான் உற்சாகமாக பள்ளிச்சென்று கொண்டிருந்தார் என்று சோகமாக கூறினர்.