நம்மூர் ஏரி சைஸ் கூட இல்லை..இது கடலாம்!! வினோதத்தில் வினோதமான உலகின் மிக சிறிய கடல்?
உலகம் பல விநோதங்களை தன்னிடத்தில் கொண்டுள்ளது நமக்கு ஆச்சரியமூட்டி வருகிறது. இதில், சில விந்தையான விஷயங்களும் மக்களால் முன்வைக்கப்படுகின்றன.
அப்படி ஒன்று தான் தற்போது குரோஷியா நாட்டில் நடந்து உலகின் கவனத்தை பெற்றுள்ளது. வெறும் 6 சதுர கிலோமீட்டர் பரப்பளவே கொண்ட ஒரு சிறிய இடத்தை கடலாக அறிவிக்கவேண்டும் என மக்கள் கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.
இந்த குட்டை - சாரி சாரி கடல் குரோஷியா நாட்டின் ஜாடர் என்ற கடலோர பகுதியின் அருகில் அமைந்துள்ளது. கரின் என குறிப்பிடப்படும் இந்த இடமானது, அதிகளவில் டால்பின்கள், ஆமைகள் இருப்பதால் இது புகழ் பெற்ற ஒரு சுற்றுலா தலமாகேவ விளங்குகிறது.
ஆனா எதுக்கு இந்த இடத்தை கடலா? அறிவிக்கணும் என அடம் பிடிக்காரார்கள் என்றால், இது நாட்டின் பிரபலமான சுற்றுலா தலம் என்பதால், உலக சுற்றுலாவாசிகளின் கவனத்தை ஈர்க்கவே இந்த நடவடிக்கையில் அப்பகுதியினர் இறங்கியதாக தகவல் உள்ளது.