அமெரிக்காவில் பள்ளிக்கூடத்தில் பயங்கர துப்பாக்கி சூடு - மாணவர்கள் 4 பேர் படுகாயம் - அதிர்ச்சி சம்பவம்
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகளை மீட்பதற்காக பெற்றோர்கள் பள்ளி வளாகம் அருகே குவிந்திருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களில் 3 பேர் மாணவர்களும், வயது முதிர்ந்த ஒருவர் ஆசிரியராக இருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இத்தாக்குதலில் கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், சம்பவ பகுதியிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் 18 வயதுடைய நபர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற அந்த நபர் தாக்குதல் நடத்தி விட்டு வாகனத்தில் தப்பி சென்றிருக்கிறார் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அவரை தேடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

