தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபர் - ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி - நடந்தது என்ன?
ஐரோப்பிய நாட்டின் லிதுவேனியா நகரில் வசித்து வந்த ஒருவருக்கு கடுமையான வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.
இதனால் அவர் ஆம்புலன்ஸ் உதவியோடு க்ளைபேடா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார். இதனையடுத்து அவருடைய வயிற்றி டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, ஸ்கேனில் கிலோ கணக்கில் ஸ்க்ரூ, நட் முதலான உலோக பொருட்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக இதில் சில பொருட்கள் 10cm நீளத்திற்கும் இருந்தது மருத்துவர்களிடையே ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் உலோகங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக அறுவை சிகிச்சை நிபுணர் சருனாஸ் டைலிடெனாஸ் கூறுகையில், இந்த நபர் சமீபத்தில் மது பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறார்.
அதன் பின் அவர் ஒரு மாத காலமாக உலோகப் பொருட்களை விழுங்கி வந்திருக்கிறார். இதனால் அவருடைய வயிற்றில் வலி ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. வயிற்றிலுள்ள உலோகங்கள் அகற்றப்பட்டுள்ளதையடுத்து அவருடைய உடல்நிலையானது தற்போது சீராக இருக்கிறது. மேலும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என்றார்.
