1400 வருஷமா ஒரே குடும்பம் தான்; உலகிலேயே பழமையான ஹோட்டல் - ஸ்டே கட்டணம் எவ்வளவு தெரியுமா?
பல நூற்றாண்டுகளாக ஹோட்டல் நிர்வாகம் ஒன்று மக்களுக்கு சேவையை வழங்கி வருகிறது.
பழமையான ஹோட்டல்
ஜப்பான், மவுண்ட் ஃபூஜியிலிருந்து சிறிது தூரத்தில் 'நிஷியாமா ஒன்சென் கேயுங்கன்' என்ற ரிசார்ட் உள்ளது. 705 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு உலகின் மிகப் பழமையான ஹோட்டல் என கின்னஸ் உலக சாதனையை பெற்றுள்ளது. இதனை, புஜிவாரா மொய்டோவா என்பவர் நிறுவியுள்ளார்.
இந்த ஹோட்டலுக்கு கெயுங்கனின் புகழ்பெற்ற குளியல் 'மொச்சிதானி நோ யு' வெந்நீர் ஊற்றுகளில் இருந்து நேரடியாக தண்ணீர் வருகிறது. இங்கு வரும் மக்கள் நீரூற்றுகளில் இருந்து நேரடியாக வரும் தண்ணீரையும் குடிக்கின்றனர்.
கின்னஸ் சாதனை
இந்த விடுதியில் 37 அறைகள் உள்ளன. அனைத்தும் பாரம்பரிய ஜப்பானிய பாணியில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. திறந்த வெளியில் குளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு இரவு தங்குவதற்கு 408 டாலர்கள் அதாவது சுமார் 38 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
அறை முன்பதிவுக்கு, நிஷியாமா ஆன்சென் கேயுங்கன் இணையதளத்தைப் பார்வையிடவும். ஹோட்டலின் ஒவ்வொரு அறையின் ஜன்னலில் இருந்தும் காட்டின் அற்புதமான காட்சி தெரியும்.
இது கடைசியாக 1997 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது.
52வது தலைமுறை தற்போது இந்த ரிசார்ட்டை நடத்தி வருகிறது. உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் இங்கு ஈர்க்கப்படுகிறார்கள்.