உலகிலேயே உயரமான சாலை திறப்பு - எங்கு தெரியுமா?

Ladakh World's highest motorable road inaugurated
By Thahir Sep 01, 2021 03:44 AM GMT
Report

லடாக் பகுதியில் உயர உலகிலேயே உயரமான சாலை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் அந்த சாலை திறக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் உள்ள லே என்ற பகுதியையும் பாங்காங் என்ற ஏரியையும் இணைக்கும் உலகிலேயே உயரமான சாலை சற்றுமுன் திறக்கப்பட்டுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலை உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமையை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

உலகிலேயே உயரமான சாலை திறப்பு - எங்கு தெரியுமா? | World S Highest Motorable Road Inaugurated Ladakh

18 ஆயிரத்து 380 அடி உயரத்தில் அமைந்த கர்துங்லா கணவாய் வழியாக சென்ற சாலை உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமையை பெற்ற நிலையில்.

தற்போது அதைவிட 220 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த சாலை இன்று முதல் திறக்கப்பட்டது என்றும் இந்த சாலையை இனி உலகிலேயே உயரமான சாலை என்ற பெருமையை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்த சாலை தாக்கப்பட்டதை அடுத்து வாகனங்கள் அதன் அதில் மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.