என்னது விமானத்தின் வேகமா? அசத்தல் இரயில் ரயில்கண்டு பிடித்த பிரபல நாடு !

china maglev train first highspeed train
By Irumporai Jul 21, 2021 09:19 AM GMT
Irumporai

Irumporai

in சீனா
Report

சீனா மணிக்கு 600 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய மேக்னடிக் இரயிலைனை பொதுப்போக்குவரத்து பயன்பாட்டிற்காக சீனா நேற்று அறிமுகம் செய்துள்ளது.

  சீனா மணிக்கு 600 கிமீ வேகத்தில் பயணம் செய்ய்யக்கூடிய காந்த இரயிலை, கடந்த 2019 ஆம் வருடம் உருவாக்கியது.

கடந்த வருடத்தின் ஜூன் மாதம் கிழக்கு சீனாவில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தின் துறைமுக நகரான கிங்டோவில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இந்த நிலையில், அதிவேக காந்த இரயிலை பொதுப்போக்குவரத்து பயன்பாட்டிற்காக சீனா நேற்று அறிமுகம் செய்துள்ளது.

கிங்டொ நகரில் இருந்து சீனாவின் காந்த இரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது தண்டவாளங்களில் பயணிக்காமல் காந்த சக்தியின் உதவியால் மிதந்தபடி பயணம் செய்யும் இரயிலில், 2 முதல் 10 பெட்டிகள் வரை இணைத்து பயணம் செய்யலாம்.

இந்த இரயிலில் உள்ள ஒவ்வொரு பெட்டியில் 100 க்கும் மேற்பட்டோர் வரை பயணம் செய்யலாம் இந்த இரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் பயணம் செய்வதால், உலகின் முதல் அதிவேக இரயில் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

மேலும் இந்த ரயில் பயணத்தில் 4 மணிநேரம் விமான பயணம் செய்யும் நேரம் 2 மணிநேரமாக குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.