ரோஜா..ரோஜா..இன்று உலக ரோஜா தினம்

World Roja day
By Thahir Sep 22, 2021 04:02 AM GMT
Report

ரோஜா மலரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அத்தகைய பெருமை வாய்ந்த ரோஜாமலருக்காக இன்று உலக ரோஜா தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி புற்றுநோய் நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள் என்பதும் அந்த நாளை உலக ரோஜா தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஜா..ரோஜா..இன்று உலக ரோஜா தினம் | World Roja Day

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதிலும் உடலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த ரோஜா தினம் அவர்களுக்காகவே மகிழ்ச்சியை கொண்டு வருவதற்காகவும் உற்சாக படுத்துவதற்காகவும் அவர்கள் தனியாள் இல்லை என்று கூறுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கனடாவை சேர்ந்த சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த சிறுமிக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் உலக ரோஜா தினம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் அதன் பின்னர் அந்த சிறுமி தன்னம்பிக்கை காரணமாக 6 மாதங்கள் உயிர் வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது