கொரோனா முன்கள பணியில் ஈடுபட ரோபோக்கள் கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை! குவியும் பாராட்டுக்கள்!

6 days ago

ஹாங்காங் விஞ்ஞானிகள் கோவிட் நோயாளிகளைக் கவனித்துக் கொள்வதற்காக புதிய வகை ரோபோவை கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். இந்த ரோபோவுக்கு அவர்கள் ‘கிரேஸ்’ எனப் பெயர் வைத்துள்ளனர்.

செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோக்கள் தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் நோயாளிகளின் பிரச்னைகளை எளிதில் புரிந்து கொள்கின்றன. குறிப்பாக, முதியவர்கள், கோவிட் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பல்வேறு நாட்டு மக்களும், வெளிநாட்டு விஞ்ஞானிகளும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். 
ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்