பிரேசில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 25 பேரை சுட்டுக் கொன்ற போலீஸ் - மக்கள் பதற்றம்
பிரசில் நாட்டில் வங்கிகளில் நுழைந்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட 25 கொள்ளையர்கள் போலீசார் சுட்டு கொன்றனர்.
பல மணி நேரம் நடந்த போராட்டத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பிரேசில் மினாஸ் ஜெராயிஸ் நகரின் பிரதான சாலையில் வங்கி கிளைகள், ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
பயங்கரமான ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு வங்கிகளில் நுழைய கொள்ளை கும்பல் முயற்சி செய்தது. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.
கொள்ளையர்களும் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 25 கொள்ளையர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், மக்களிடையே அதிர்ச்சியும் ஏற்பட்டது.