உலகின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம் இதுதான் - வாய்பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு!

Saudi Arabia
By Sumathi Jan 12, 2024 10:33 AM GMT
Report

உலகிலேயே நம்பர் ஒன் பணக்கார குடும்பம் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

பணக்கார குடும்பம்

உலகிலேயே மிக பணக்கார குடும்பமாக சவுத் குடும்பம் அறியப்படுகிறது. இவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.116 லட்சம் கோடி அளவு சொத்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

saud family

அதேசமயத்தில் உலகின் பிரபல பணக்காரரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உரிமை யாளர் எலான் மஸ்கிடம் 251.3 பில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. பில்கேட்ஸிடம் 199.6 பில்லியன் டாலர் அளவுக்கு செத்து மதிப்பு உள்ளன.

டாப் பணக்கார குடும்பங்கள்; பாதி இந்தியா இவங்ககிட்டதான், இல்லாத விஷயமே இல்ல - யாரெல்லாம் தெரியுமா?

டாப் பணக்கார குடும்பங்கள்; பாதி இந்தியா இவங்ககிட்டதான், இல்லாத விஷயமே இல்ல - யாரெல்லாம் தெரியுமா?

சவுத் குடும்பம் 

இவர்களைக் காட்டிலும் சவுத் குடும்பத்திடம் 1.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்து உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சவுத் குடும்பத்தில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களும், மேலும் 2000 உறவினர்களால் ஒட்டுமொத்த செல்வமும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

saudi arabia

குறிப்பாக சவுதி அரேபியாவை நவீனப்படுத்தியவர் என்று பாராட்டப்படும் அப்துல் அஜீஸ் பின் அப்துல் ரகுமானின் பரம்பரையிடம் தான் சொத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இவரின் வழியில் வந்த இளவரசர் முஹம்மது பின் சல்மான் தான் தற்போது சவுதி அரேபியாவை ஆண்டு வருகிறார்.

இந்த அனைத்து சொத்துக்களும் எண்ணெய் வளத்திலிருந்து பெறப்பட்டது. இந்நிலையில் சவுத் குடும்பத்தின் சொத்து மதிப்பு ஆண்டுதோறும் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.