தேர்தல் விழிப்புணர்வு: உலக சாதனை படைத்த மாணவர்கள்

Election
By Fathima Mar 28, 2026 09:53 AM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது, இத்தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி பிரசாரம் தொடங்கியுள்ளது.

இன்று மாலை திமுக கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குபதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் விழிப்புணர்வு: உலக சாதனை படைத்த மாணவர்கள் | World Record In Election Awareness

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், பாவை பொறியியல் கல்லூரியும் இணைந்து தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026யை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மொபைல் செயலியை மனித வடிவில் பிரம்மாண்டமாக அமைத்து உலக சாதனை படைத்துள்ளது.

கல்லூரி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் சாதனை நிகழ்த்தப்பட்டது, மாவட்ட ஆட்சியர், தேர்தல் அதிகாரி துர்கா மூர்த்தி தலைமையில் 8662 பேர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.